தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காம்உறுவர் கற்றுஅறிந் தார் - குறள்
செல்வத்துப்பயன் ஈதல் - புறநானுற்றின் கருத்தின்படி, கடவுள் நமக்குப் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்விச் சேவையைத் தொடங்கினேன். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். கல்விச் சேவையில் என்னுடன் பயணித்த எம் பள்ளி ஆசிரியர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கேடில்லாத செல்வமதன் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வழங்கும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.
எனது கல்விச் சேவையை எதிர்வரும் எதிர்கால சந்ததியினரும் தொடர்ந்திட வாழ்த்துகிறேன். எனது கல்விப் பயணம் வாழையடி வாழையாய் தொடரும். பயணங்கள் முடிவதில்லை. கல்விக்கு கரையில்லை.
தோன்றின் புகழோடு தோன்றுக. அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - குறள்